652மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
      வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
      தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
      அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
      நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே             (7)