655வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
      மண் உய்ய மண்-உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
      சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
      அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு யானும்
      இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே             (10)