657தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
      அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
      வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
      எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
      காணும் கண் பயன் ஆவதே             (1)