663கார்-இனம் புரை மேனி நற் கதிர்
      முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும்
      அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
      கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
      வாரம் ஆகும் என் நெஞ்சமே             (7)