677ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே             (2)