678பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல்
மின் வட்டச் சுடர்-ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்-வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே            (3)