68 | காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய் ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (6) |
|