680கம்ப மத யானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே             (5)