683பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே             (8)