686மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக்
கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன
பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே             (11)