695நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே             (9)