698கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
      கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
      கள்ள-விழியை விழித்துப் புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ
      வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்
      தாமோதரா மெய் அறிவன் நானே             (2)