701மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
      வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்
      போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
      கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?
      இன்னம் அங்கே நட நம்பி நீயே.             (5)