704என்னை வருக எனக் குறித்திட்டு
      இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
      மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்
      பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்
      வருதியேல் என் சினம் தீர்வன் நானே            (8)