705மங்கல நல் வனமாலை மார்வில்
      இலங்க மயில்-தழைப் பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி
      பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
      குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத
      உன் குழலின் இசை போதராதே?             (9)