707ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
      அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ
      வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏல வார் குழல் என்மகன் தாலோ
      என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்
      தாயரிற் கடை ஆயின தாயே             (1)