708வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
      மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
      பொலியும் நீர்-முகிற் குழவியே போல
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்
      அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
      கேசவா கெடுவேன் கெடுவேனே             (2)