712தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
      தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன்
      மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
      வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
      என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே            (6)