713 | குழகனே என்தன் கோமளப் பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா மழலை மென்னகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே! (7) |
|