714முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
      முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
      நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
      அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
      தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே             (8)