716வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
      வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ
      சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்
      கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்
      தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே             (10)