717மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை
      வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
      தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்
      கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே             (11)