719புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ             (2)