722பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ             (5)