723சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ             (6)