726தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ             (9)