727தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ             (10)