728கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன்
தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே             (11)