731கொல் அணை வேல் வரி நெடுங் கண் கௌசலைதன்
      குல மதலாய் குனி வில் ஏந்தும்
மல் அணைந்த வரைத் தோளா வல் வினையேன்
      மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்
      வியன் கான மரத்தின் நீழற்
கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ?
      காகுத்தா கரிய கோவே              (3)