732வா போகு வா இன்னம் வந்து ஒருகாற்
      கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா
      விடையோன்தன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல்வினையேன்
      மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
      போகாதே நிற்குமாறே             (4)