733பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய
      மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
      வெம் பசிநோய் கூர இன்று
பெரும்பாவியேன் மகனே போகின்றாய்
      கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற் கேட்ட அருவினையேன்
      என் செய்கேன் அந்தோ யானே            (5)