735 | பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந் துகில் சேர் அல்குற் காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல் தூ மறையீர் இது தகவோ? சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே (7) |
|