737முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி
      அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின்
      வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக்
      கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
      ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே!             (9)