738 | தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வளநகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு-குலத்தார் தங்கள் கோவே (10) |
|