739ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்
      வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்
      புலம்பிய அப் புலம்பல்தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்கோன்
      குடைக் குல சேகரன் சொற் செய்த
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்
      தீ நெறிக்கண் செல்லார் தாமே             (11)