74மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
      கருங்குழற் குட்டனே சப்பாணி             (1)