| 740 | அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச் செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1) |
|