742செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
      சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
      வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
      இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே.            (3)