743 | தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப் பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே (4) |
|