744 | வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி-வில் வாங்கி கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய எய்தான்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே (5) |
|