745தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
      தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு
      வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை
      ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே.             (6)