746 | குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7) |
|