748செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று
      செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்
      தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை
      உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே             (9)