749அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
      அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
      இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே            (10)