750தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
      திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
      அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்
      கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே             (11)