86செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
      சிறுபிறை முளைப் போல
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே
      நளிர் வெண்பல் முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி
      பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ             (2)