871காவலிற் புலனை வைத்து
      கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
      நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
      முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
      அரங்க மா நகருளானே             (1)