872பச்சை மா மலை போல் மேனி
      பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
      ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
      இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
      அரங்க மா நகருளானே             (2)