874மொய்த்த வல்வினையுள் நின்று
      மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே
      பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு
      இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும் அந்தோ
      பிறவியுள் பிணங்குமாறே             (4)