876மறம் சுவர் மதில் எடுத்து
      மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
      புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
      அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
      புள் கௌவக் கிடக்கின்றீரே            (6)